சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர காப்புக்கட்டு விழா
ADDED :2800 days ago
கீழக்கரை:கீழக்கரை அருகே தில்லையேந்தலில் உள்ள தட்டார்மடம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். வரும் மார்ச்30 அன்று நடக்கும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுநாள்தோறும் அபிஷேக ஆராதனை நடக்க உள்ளது. கீழக்கரை தட்டான்தோப்பு தெருவழிகாட்டி பாலமுருகன் கோயிலில்பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலையில் காப்புகட்டு நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.தலைவர் மனோகரன், செயலர் சுதர்சன், தர்மகர்த்தா ஜெயராஜ், விவேகானந்தன்,பூஜகர் அய்யாச்சாமி, காசிநாதன் உள்ளிட்ட விழாக்குழுவினர் பங்கேற்றனர்.