உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி : அவிநாசியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா மற்றும் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது.

அவிநாசி கிழக்கு வீதியில் உள்ள அரசமரத்து விநாயகர் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில், 21ம் ஆண்டு விழா நடந்தது. இவ்விழா, 16ம் தேதி, பொட்டுசாமி அம்மன் பொங்கலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியன நடந்தன. அதன்பின், கம்பம் நடப்பட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தலும் நடந்தது. மாலை அக்னிக்கும்பம் எடுத்தல், கம்பம் கங்கையில் விடும் நிகழ்ச்சியும் நடந்தது. (மார்ச் 23)  மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதியுலா நடந்தது. அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர், பூலாவாரி சுகுமாரன் நகர், கருமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, 18ம் தேதி விநாயகர் பொங்கல் மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு ஆகியன நடந்தன. மாவிளக்கு, பொங்கல் மற்றும் உச்சிகால பூஜையை தொடர்ந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி ஆகியன நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதியுலாவும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !