உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

அவிநாசி கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

அவிநாசி : கருவலூர்ர் மாரியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவை யொட்டி, கம்பம் நடப்பட்டு, பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.

அவிநாசி அருகேயுள்ள கருவலூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, 31ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, கோவில் முன், திருக்கம்பம் நடப்பட்டுள்ளது. தினமும், காலை மற்றும் மாலை யில், பெண்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து வருகின்றனர்.

தேர்த்திருவிழாவில், அடுத்த மாதம், 4ம் தேதி காலை, 6:00க்கு, மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றயை தினம், மதியம், 2:00 மணிக்கு தேரோ ட்டம் நடக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டத்துக்கு பின், 8ம் தேதி, மகா தரிசனம், மாலை, 3:00க்கு, அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேருக்கு வார்னீஷ் அடித்தும், சக்கரங்களுக்கு வண் ணம் தீட்டியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !