திருவள்ளூரில் திருப்பதி மின் ரயில் மதியம் இயக்கப்படுமா?
திருவள்ளூர்: திருப்பதி - சென்ட்ரல் புறநகர் மின்சார ரயிலை, மதிய நேரத்தில் இயக்க வேண் டும் என, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கத்தினர், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு, கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரலில் இருந்து, திருப்பதிக்கு புறநகர் மின்சார விரைவு ரயில் - ரயில் எண்: 66047/66048 - மூன்று மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ரயில், காலை, 9:50க்கு புறப்பட்டு, மதியம், 1:30 மணிக்கு திருப்பதிக்கு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 5:20க்கு மீண்டும் புறப்பட்டு, இரவு, 9:05க்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
ஏற்கனவே மாலை நேரத்தில், 4:10க்கு புறநகர் மின்சார ரயில், 5:50க்கு சப்தகிரி விரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், புதிதாக அறி முகப்படுத்தப்பட்ட புறநகர் மின்சார விரைவு ரயிலுக்கும், சப்த கிரி விரைவு ரயிலுக்கும் அரை மணி நேரமே வித்தியாசம்.
மேலும், கட்டணம் பாதிக்கு மேல் குறைவு என்பதால், பலரும், புதிதாக அறிமுகப்படுத்தப்ப ட்ட மின்சார விரைவு ரயிலை பயன்படுத்துகின்றனர். இதனால், ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், தற்போது, மதிய நேரத்தில், சென்னைக்கு செல்ல ரயில் வசதி இல்லை. எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயிலை, மதியம், 2:30 மணிக்கு இயக்கினால் பயணியர் பயன்பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.