பழநி பங்குனி உத்திரவிழா பாதுகாப்பு பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED :2800 days ago
பழநி: பழநி பங்குனி உத்திரவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் ஆய்வு செய்தார். பழநியில் பங்குனி உத்திரவிழா இன்று(மார்ச் 24) துவங்கி பத்துநாட்கள் நடக்கிறது.
இவ்விழாவில் பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள், தீத்தடுப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி., சக்திவேல் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதி, யானைப்பாதை, மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இணைஆணையர் செல்வராஜ், டி.எஸ்.பி., முத்துராஜ் உடனிருந்தனர்.--