உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரியகுளம்:  பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. மூலவர் ஈஸ்வரனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், யாகபூஜை நடந்தது.

விநாயகர், ஞானம்பிகை, முருகன், வள்ளி- தெய்வானை, பைரவர், நவக்கிரகம், உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந் தது.

உற்ஸவமூர்த்தி காளஹஸ்தீஸ்வரர்- ஞானாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !