உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் அஞ்சலி

திருவண்ணாமலை கோவில் யானைக்கு பக்தர்கள் அஞ்சலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை, ருக்கு, 22 ஆண்டுகளாக, கோவிலின் அனைத்து விழாக்களிலும் பங்கேற்று வந்தது. தினமும், அதிகாலை, 5:00 மணிக்கு, குமரக்கோவில் கிணற்றிலிருந்து, சுவாமி அபிஷேகத்திற்கு, யானை தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம், உடல் நலக்குறைவால், யானை இறந்தது. ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !