சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :3090 days ago
சின்னாளபட்டி: சஷ்டியை முன்னிட்டு, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியம், சதுர்முக முருகனுக்கு பாலா பிஷேகம் நடந்தது. பல்வேறு திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவ னம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.