உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயில் கொடியேற்றம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் கொடியேற்றம்

பரமக்குடி, பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் துவக்கமாக, (மார்ச் 22) முன் தினம் இரவு காப்புக்கட்டப்பட்டது.

தொடர்ந்து  (மார்ச் 23) காலை11:00 மணிக்கு பாலபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மேல்கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, தலைமை குருக்கள் குமார் தலைமையில் சிங்க கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது.

முதல் நாள் இரவு அம்மன் பூதகி வாகனத்தில் வீதிவலம் வந்தார். அப்போது பள்ளி குழந்தை கள் மாறுவேடம் அணிந்தும், கிராமிய கலைகளை உயிரூட்டும் வகையில் ஆடிவந்தனர். மேலும் தினமும் அம்மன் வெள்ளி சிங்க, அன்ன, ரிஷப, யானை, கிளி, காமதேனு, குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.

மார்ச் 26 ல் வண்டிமாகாளி உற்ஸவமும், மார்ச் 31 ல் இரவு மின்சார தீப தேரோட்டம் இரவு 8:10 மணிக்கு அம்மன் நான்கு மாடவீதிகளில் வலம் வருதல் நடக்கிறது.

இரவு கள்ளர்அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் வைகையில் வலம் வருவார்.ஏப். 2 ல்பக்தர்கள் பங்கேற்கும் பால்குட ஊர்வலம், பாலபிஷேகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் மற்றும்தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !