திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ’ரூ.4 கோடி மதிப்பில் டைல்ஸ் நடைபாதை’
திருவண்ணாமலை: ”பவுர்ணமி கிரிவலம் செல்லும், பக்தர்களின் வசதிக்காக, நான்கு கோடி ரூபாய் மதிப்பில், டைல்ஸ் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது,” என, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார். திருவண்ணாமலையில், சுற்றுலாத்துறை சார்பாக, சுற்றுலா கலை விழா நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், தமிழர்களின் பாரம்பரிய, கலை நிகழ்ச்சிகளை காண, அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில், பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, நான்கு கோடி ரூபாய் மதிப்பில் சாலையின், இருபுறமும் டைல்ஸ் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. 32 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுலா வரவேற்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். காளி மற்றும் கருப்பசாமி நடனம், கை சிலம்பம், கரகம், காவடி உள்ளிட்ட, பல்வேறு பாரம்பரிய, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.