உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைகுலைகள் அலங்காரத்தில் ராமநவமி விழா

வாழைகுலைகள் அலங்காரத்தில் ராமநவமி விழா

சிவகாசி : வெம்பக்கோட்டை தாலுகா, கல்லமநாயக்கன்பட்டியில் சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி விழா நடந்தது. கோயிலை சுற்றிசுமார் 10 ஆயிரம் வாழைக் குலைகள், செவ்விளநீர், மக்காச்சோளக்கதிர்களால் உருவாக்கப்பட்ட மண்டப பந்தல் மற்றும் 3 ஆயிரம் துளசி தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு ராமர் ஜனன உற்சவம், முத்துக்குத்தல், ஊஞ்சல் சேவை, தாலாட்டு பாடல்கள், மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 9.30 மணிக்கு சீதாராமர் ரதம் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தன. பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !