உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராகிஅம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

வாராகிஅம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

கீழக்கரை : உத்தரகோசமங்கை வடக்கு ரதவீதி வாராகி அம்மன் கோயிலில் மண்டலபிஷேக விழா நடந்தது.பிப்., 5 கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மஞ்சள் அலங்காரமும், வெள்ளிக்கவசமும் சாத்தப்பட்டது. நேற்று காலை 9:00 முதல் பிற்பகல் 12:00 மணிவரை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். தேவேந்திர சிவாச்சாரியார் குழுவினர் வேதமந்திரங்கள் முழங்கி, உலக நன்மைக்காகவும், உரிய காலங்களில் மழைபெய்ய வேண்டியும் பூஜை செய்தனர். கோயில் ஸ்தானிகம் மங்களப்பட்டர், ராமநாதபுரம் சமஸ்தான செயல் அலுவலர் ராமு, உத்தரகோசமங்கை பஷே்கார் ஸ்ரீதர், பவுர்ணமி விழாக்கமிட்டி உறுப்பினர் வி.வி.சரவணபாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !