உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமாபுரி பகுதியில் மாயனக்கொள்ளை விழா

தருமாபுரி பகுதியில் மாயனக்கொள்ளை விழா

புதுச்சேரி: தருமாபுரி பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மாயனக் கொள்ளை விழா, நேற்று நடந்தது. உழவர்கரை நகராட்சி தருமாபுரி பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாயனக்கொள்ளை உற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, 23ம் தேதி பூபாலக்கப்பரை உற்சவமும், 24ம் தேதி இரவு 7 மணிக்கு அக்னி கரக உற்சவம் நடந்தது.  நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ரணக்களிப்பு உற்சவமும், நேற்று மாலை 6 மணிக்கு மாயனக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !