பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
ADDED :2794 days ago
சங்ககிரி: சங்ககிரி, புள்ளிபாளையம், பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். சங்ககிரி அருகே, மோரூர் கிராமம், புள்ளிபாளையத்தில், பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை, 9:15 மணிக்கு நடக்கிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, காவிரியில் இருந்து, புனித நீர் தீர்த்தக்குடம் கொண்டு வரப்பட்டு, பக்தர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாலை கோ பூஜை, அஸ்வ பூஜை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை நடந்தது. இன்று காலை இரண்டாம் காலயாக பூஜை, சிலைகள் பிரதிஷ்டை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நாளை காலை, 9:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.