பசுமலை ஆண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2793 days ago
செஞ்சி: பசுமலைத்தாங்கல் பசுமலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். செஞ்சி அடுத்த பசுமலைத்தாங்கல் கிராமத்தில் பழமையான பசுமலை ஆண்டவர் கோவலில் திருப்பணிகள் செய்து, புதிதாக சப்தகன்னிகள், முனீஸ்வரன் கோவில் கட்டப்பட்டதையொட்டி நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோபூஜை, கலச ஸ்தாபனம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து காலை 9:45 மணிக்கு சப்த கன்னிகளுக்கும், அதனைத் தொடர்ந்து பசுமலை ஆண்டவர் மற்றும் முனீஸ்வரனுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.