உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரியில் ராம நவமி விழா கோலாகலம்

தர்மபுரியில் ராம நவமி விழா கோலாகலம்

தர்மபுரி: ராம நவமியை முன்னிட்டு, வெங்கட்டம்பட்டி பட்டாபிராமர் கோவிலில், நேற்று, சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்து. இதையொட்டி, நேற்று முன்தினம், காலை, 8:30 மணிக்கு, பட்டாபி ராமருக்கு ஜனன ?ஹாமம், அபிஷேக அலங்கார மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இரவு, ராம நாம பஜனை நடந்தது. நேற்று மதியம், 12:15 மணிக்கு, சீதா, ராமருக்கு, திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சீதா, ராமரை வழிபட்டனர். இன்று இரவு, 9:00 மணிக்கு, சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், ராமர் ருக்மணி அலங்காரத்தில், சீதா, ராமர் திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 9:00 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது. ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !