உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் வறண்டதால் பக்தர்கள் வேதனை

தெப்பக்குளம் வறண்டதால் பக்தர்கள் வேதனை

தலைவாசல்: தலைவாசல் அருகே, கோவில் தெப்பக்குளம் வறண்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தலைவாசல், காட்டுக்கோட்டை அருகே உள்ளது வடசென்னிமலை. இதன் உச்சியில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் விழாக்கள், சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மலை அடிவாரத்தில், தெப்பக்குளம் உள்ளது. கோவில் விழாக்களுக்கு, இங்கு நீர் எடுத்து செல்வது வழக்கம். தலைவாசல் பகுதியில் பெய்த தொடர் மழையால், கடந்த அக்டோபரில் தெப்பக்குளம் நிரம்பியது. தற்போது மழை இல்லாததுடன், வெயிலும் அதிகரித்துள்ளதால், தெப்பக்குளம் முற்றிலும் வறண்டுள்ளது. ஓரிரு நாளில், பங்குனி உத்திரம் தேரோட்டம் நடக்கவுள்ளது. இம்முறை கோவிலுக்கு, புனித நீர் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !