“தொட்டி”யில் நீராடுங்க!
ADDED :2794 days ago
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி என்னும் இடத்தில் உள்ளது விருப்பாச்சி ஆறுமுகநயினார் கோயில். இங்கு ஒரு நாகத்தின் மத்தியில் மயிலுடன்நின்ற கோலத்தில்நாக சுப்பிரமணியர் அருள் பாலிக்கிறார். ராகு, கேது தோஷம் நீங்கிட இவருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
விசேஷ நாட்களில் ஆறுமுக நயினார், நாக சுப்பிரமணியருக்கு சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயில் முன்புள்ள வற்றாத தீர்த்தத்தின் பெயரால் இத்தலம் “தீர்த்தத் தொட்டி” என அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று, இங்கு நீராடி, வழி பட்டால் நினைத்தது நடக்கும்.