பரமக்குடி முருகன் கோயிலில் மரத்தேர் வெள்ளோட்டம்
ADDED :2793 days ago
பரமக்குடி: பரமக்குடி குமரசுப்ரமண்ய சுவாமி கோயிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்ட விழா நடந்தது. வெள்ளோட்ட விழா மாலை 5:00 மணிக்கு கும்பஸ்தாபனத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு ேஹாமம், அபிேஷகம் நிறைவடைந்தது. இரவு 8:00 மணிக்கு புதிய மரத்தேர் கோயில் பிரகாரத்தைச்சுற்றி வந்தது. தொடர்ந்து மீண்டும் தேரில் சுப்ரமணிய சுவாமி பிரகாரத்தைச் சுற்றி வந்தார். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் இழுத்து வந்தனர். இதன் படி பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு இந்த தேர் தொடர்ந்து பிரகாரங்களில் சுற்றி இழுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.