ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு!
ADDED :5064 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை(ஜன.5) சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.இதையொட்டி, காலை பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடக்கிறது. காலை 7.35 க்கு பரம பத வாசல்(சொர்க்க வாசல்) திறப்பு நடக்கிறது. ஆண்டாள்,ரெங்கமன்னார் எழுந்தருளலும் ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தலும் நடக்கிறது. தொடர்ந்து ஆழ்வார்கள் மங்களாசானமும், திருவாய்மொழி துவக்கமும் நடக்கிறது. பெரிய பெருமாள் பக்தி உலா , தொடர்ந்து அரையர் வியாக்யானம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு, ஆஸ்தானம் சேருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் உட்பட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.