சில்வார்பட்டி காளியம்மன் கோயிலில் அக்னி சட்டி நேர்த்திக்கடன்
ADDED :2794 days ago
தேவதானப்பட்டி, சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி காளியம்மன்கோயில் பங்குனி திருவிழா நடந்தது வருகிறது. நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கதிரப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, ஜெயமங்கலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். முதல் நாள் கங்கையில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் மாவிளக்கு எடுத்தனர். பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டு நடந் தது. மாலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த், எஸ்.ஐ.,க்கள் வெங்கடேஷ்பிரபு, சாகுல் ஹமீது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.