உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
ADDED :2794 days ago
சாயல்குடி:சாயல்குடி அருகே திருமாலுகந்தான் கோட்டை உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. மார்ச். 20 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் நடந்தது். மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் காணப்பட்டார். செஞ்சடைநாதர் கோயிலில் இருந்து 108 பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை டி.எம்.கோட்டை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.