உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்

கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்

கோவை: மகாவீர் ஜெயந்தியையொட்டி, கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் பங்கேற்ற ஆன்மிக ஊர்வலம் நடந்தது. கோவை ரங்கே கவுடர் வீதியில் சுபாஷ்நாத் ஜெயின் கோவில் அமைந்துள்ளது.

இங்கு வர்த்தமான மகாவீரர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மகாவீரர் பிறந்நாளில், அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரமாண்ட ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதன்படி சுபாஷ்நாத் கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட மகாவீரர், ரதத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டார்.

ஏராளமான சன்னியாசிகள் ஒன்று திரண்டு, மகாவீரர் பிறந்தநாள் யாத்திரையை துவக்கி வைத்தனர். ஊர்வலம் ரங்கேகவுடர் வீதியிலிருந்து, புறப்பட்டு, இடையர்வீதி, ராஜவீதி சந்திப்பை கடந்து, வைசியாள் வீதியை அடைந்தது. ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள், சமய பெரியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் ஆடல், பாடல்களும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !