உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் பாகுபாடின்றி தரிசனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலில் பாகுபாடின்றி தரிசனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகுபாடின்றி பக்தர்களை ஒரே சமதுாரத்தில் நிற்க வைத்துதரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துவாக்குடி முருகேசன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாரியம்மன் கோயிலில் முதல் வரிசையில் அரசியல்வாதிகள், 2 வது வரிசையில் வி.ஐ.பி., கட்டண தரிசனம் செய்வோர் கருவறை வரைஅனுமதிக்கப்படுகின்றனர். 3வது வரிசையில் ஏழைகள் 15அடி துாரத்தில் நின்று தரிசனம் செய்கின்றனர்.  அவர்களை ஒரு நிமிடம்கூட நிற்க விடுவதில்லை. அரசியலமைப்புச்சட்டப்படி அனைவருக்கும் சம உரிமை உள்ளது. பாகுபாடின்றி அனைவரும்தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.ராஜமாணிக்கம் அமர்வு: கட்டணம், இலவச தரிசனம் என புறக்கணிக்காமல், பாகுபாடின்றி அனைவரையும் அர்த்தமண்டபம் அருகே ஒரே சமதுாரத்தில் நின்று தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !