உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ

திருமலையில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ

திருப்பதி: திருமலையில், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில், நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.திருப்பதி - திருமலையில், நேற்று மாலை, லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில், வழக்கம் போல், ஊழியர்கள் லட்டு தயாரித்து கொண்டிருந்தனர். அதிக வெப்பம் காரணமாக, திடீரென, நெய்யில் தீப் பிடிக்க துவங்கியது. அந்த தீ, சுவற்றில் உள்ள நெய் பிசுக்குகள் மீதும், காகிதங்கள் மீதும் பட்டதால், மளமளவென பரவியது. மடப்பள்ளியில் மேல் பகுதி வரை, தீ பரவியது.தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அரை மணிநேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், இரு ஊழியர்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. தீ விபத்தை தொடர்ந்து, மடப்பள்ளியில் லட்டு தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாசராஜூ கூறியதாவது:இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நெய் இருந்த சட்டிகள் தீயில் எரிந்தன. அவற்றை, ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இன்று அதிகாலைக்குள், மடப்பள்ளி சுத்தம் செய்யப்பட்டு, லட்டு தயாரிக்கும் பணி, வழக்கம் போல் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !