பழநி பஞ்சாமிர்தத்திற்கு குவிந்த 125 டன் பழங்கள்
ADDED :2793 days ago
பழநி : பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழநியில், பஞ்சாமிர்தம் தயாரிக்க, 125 டன் மலை வாழைப் பழங்கள், விற்பனைக்கு வந்துள்ளன. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு குழுக்களாக வரும் பக்தர்கள், பஞ்சாதமிர்தம் தயார் செய்து, முருகனுக்கு அபிஷேகம் செய்வர்.இவ்வாண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்க, மைசூர் குடகுமலை, சிறுமலை, பாச்சலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 125 டன் மலைவாழைப் பழங்கள் குவிந்துள்ளன. வியாபாரி முத்துச்சாமி கூறுகையில், குடகு மலை வாழை மட்டும், 20 லட்சம் காய்கள் வந்துள்ளன. பாச்சலுார், கொடைக்கானல் வாழையில், ஐந்து லட்சம் காய்கள் வந்து இறங்கியுள்ளன,” என்றார்.