உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா: தேர் வடம் பிடித்த பக்தர்கள்

மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா: தேர் வடம் பிடித்த பக்தர்கள்

கொடுமுடி: கொடுமுடி, மலையம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். கொடுமுடி, மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 20ல் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. 26ல், ஊஞ்சல் உற்சவம், புஷ்ப பல்லக்கு நடந்தது. 27ல், குதிரைவாகனத்தில் திருவீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடந்தது. 9:00 மணிக்கு மலையம்மன் கோவிலில் இருந்து, மணிக்கூண்டு, மகுடேஸ்வரர் கோவில் வீதி, போலீஸ் ஸ்டேஷன் வீதி வழியாக தேர் இழுத்து வரப்பட்டு, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், வடம்பிடித்து தேரை இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !