குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் கோயில் தேரோட்டம்
காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது
கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் 25-ம் தேதி வள்ளி நாயகி திருமணம், பூப்பல்லக்கு நடந்தது. 27-ம் தேதி தங்கரதத்தில் சுவாமி வீதி உலா வந்தார். 28-ம் தேதி வையாபுரியில் தெப்பம், வெள்ளி ரதத்தில் வீதி உலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளலும், மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. 5:45 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இரவு 8:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது.
இன்று (மார்ச் 30)ல் மதியம் 12:15 மணிக்கு உத்திரம் தீர்த்த விழா நடக்கிறது.. விழா நாட்களில் இரவில் சுவாமி வெள்ளி, ருத்ராட்ச கேடகத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.