பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்தேர்திருவிழா மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவில்தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 30ல் மாலை நடந்தது.
பெரியதேரில் சோமஸ்கந்தர்- அறம்வளர்த்த நாயகி, சிறிய தேரில் விநாயகர், சண்முகர், வள்ளி- தெய்வானை, சண்டிகேஸ்வரர், பிரியாவிடை அம்மன் வலம் வந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கைலாசநாதர் கோயில் ஆலோசகர் ஜெயபிரதீப் , ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளைஆலோசகர் சரவணன், செயல்அலுவலர் (பொறுப்பு கிருஷ்ணவேணி, தாசில்தார் கிருஷ்ணக்குமார், திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், உறுப்பினர்கள் சிதம்பரசூரியவேலு, நாகராஜன், பாண்டியராஜன்,பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., கணபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.