தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் கொடியேற்றம்
ADDED :2796 days ago
தேனி: தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா (மார்ச் 29) கொடியேற் றத்துடன் துவங்கியது.
காலை 7:35 மணிக்கு அல்லிநகரம் கோயில் வீட்டிலிருந்து புறப்பாடு நடந்து மலைக்கோயில் காலை 11:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு 10:00 மணிக்கு பூக்குழி மிதித்தல் நடந்தது. ஏப்.,10ல் கலசம் கட்டுதலும், ஏப்.,13ல் சுவாமி பங்களாமேடு சோலை மலை அய்யனார் கோயில் புறப்பாடும், ஏப்., 14ல் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி மலையடிவாரத்தில் உள்ள கோயில் புறப்பாடும், இரவு புஷ்ப, மின் அலங்காரத்தில் நகர்வலம் நடக்கிறது.
ஏப்.,16ல் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை சமய அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.