தேவதானப்பட்டியில் காளியம்மன் கோயில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :2796 days ago
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. மூன்றாம்நாளான நேற்று (மார்ச் 29) காலை அங்குள்ள வீட்டில் இருந்து விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடனுக்காக காவடி, பால்குடம் எடுத்தனர்.
கடைவீதி, பெரியவீட்டு தெரு உட்பட கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு சென்றனர். மாலையில் முளைப்பாரி எடுத்து கங்கைக்கு சென்றது.