உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கபாலீஸ்வரர்கோவிலில் இன்று (மார்ச் 31)ல் திருக்கல்யாணம்

சென்னை கபாலீஸ்வரர்கோவிலில் இன்று (மார்ச் 31)ல் திருக்கல்யாணம்

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழாவின் கடைசி நிகழ்வாக, திருக்கல்யாண உற்சவம், இன்று (மார்ச் 31)ல் மாலை நடக்கிறது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, மார்ச், 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 24ல் அதிகார நந்தி சேவையும்; மார்ச், 28ல், தேர் திருவிழாவும் நடந்தன. பங்குனி மாத உற்சவத்தின் முக்கிய நிகழ்வான, அறுபத்து மூவர் உற்சவம், நேற்று(மார்ச் 30)ல் முன்தினம் சிறப்பாக நடந்தது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று(மார்ச் 30)ல், இறைவன், இரவலர் கோல விழா, ஐந்திருமேனிகள் விழா நடந்தன. பங்குனி பெருவிழாவின் கடைசி நிகழ்வாக, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண வைபவம், இன்று (மார்ச் 31)ல் மாலை நடக்கிறது. முன்னதாக, மாலை, 5:00 மணிக்கு புன்னை மரத்தடியில், உமாதேவியார், மயிலுருவுடன் மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !