உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி தாயமங்கலம் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

இளையான்குடி தாயமங்கலம் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் நேற்றுமுன்தினம்(மார்ச் 29)ல் காலை விக்னேஸ் வரர் பூஜையும், இரவு 11:00 மணிக்கு கொடியேற்றமும், அம்மனுக்கு காப்பு கட்டுத லும் நடந்தது. தினமும் இரவில், வாகனங்களில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.ஏப்., 5ல் பொங்கல், ஏப்., 6 இரவு மின்னொளி தேரோட்டம் நடக்கின்றன. ஏப்.,7 காலை பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திகடன் செலுத்துவர்.அன்று மாலை அம்மன் ஊஞ்சல் உற்ஸவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 8 ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !