திருப்பூர் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் பரவசம்
ADDED :2792 days ago
திருப்பூர்;கோவில் வழி பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் (மார்ச் 30)ல் நடைபெற்றது.
திருப்பூர் கோவில்வழி, பெரும்பண்ணை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயார் திருக்கல்யாண மகா உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக காலை, உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு புண்யாகவாசனை, கலசஸ்தபானம், மஹா சங்கல்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து,
சத்யநாராயண பூஜை, ஊஞ்சல் சேவை நடந்தது. பெருமாளும், தாயாரும், மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருப்பூர் மற்றும் கோவில்வழி சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.