அவிநாசியில் இருமுடி மண்டபம் கட்டகால்கோள் விழா பூஜை
ADDED :2792 days ago
அவிநாசி:அவிநாசி, பை பாஸ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே, ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை சார்பில், இருமுடி கட்டு நிறை மற்றும் அன்னதான மண்டபம் கட்டப்படுகிறது.
இதற்கான கால்கோள் விழா மற்றும் யாக பூஜை, கோவில் வளாகத்தில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். இது குறித்து, ஐயப்பன் கோவில் ஜெயப்பிரகாஷ் குருக்கள் கூறுகையில், இந்த மண்டபம் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, 2,500 சதுரடி பரப்பில் அமைக்கப்படு கிறது. வழிபாடு நடத்த ஹால், உணவுக்கூடம், சமையல் அறை உட்பட பல வசதிகளுடன் கட்டப்படுகிறது, என்றார்.