உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் குறிஞ்சி குமரனுக்கு காவடி எடுத்த பக்தர்கள்

கொடைக்கானல் குறிஞ்சி குமரனுக்கு காவடி எடுத்த பக்தர்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள்பங்கேற்று காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம் மற்றும் இந்து முன்னனி சார்பில் கடந்த 41 ஆண்டுகளாக பங்குனி உத்திர காவடி விழா நடக் கிறது.நாயுடுபுரம், அட்டுவம்பட்டி, ஆனந்தகிரி, பாம்பார்புரம், செல்லப்புரம், புதுக்காடு போன்ற பகுதிகளிலிருந்து வந்த அனைத்து ஊர் காவடிகளும் கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் ஒன்றினைந்தன. பின்னர் புறப்பட்ட காவடி ஊர்வலம் 7 ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அரசு மேல்நிலைப்பள்ளி,
மாப்பிள்ளை முதலியார் தெரு வழியாக குறிஞ்சியாண்டவர் கோயிலை சென்றடைந்தது. பகல் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. மாலை 4 மணியளவில் 18 விதமான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காவடி விழாவிற் கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !