உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு கைலாசநாதர் கோவிலி்ல் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு கைலாசநாதர் கோவிலி்ல் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கைலாசநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாணம், நேற்று (மார்ச் 30)ல், நடைபெற்றது. செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு, பங்குனி உத்திர திருக்கல்யாணம் விழா, நேற்று (மார்ச் 30)ல் காலை, கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக த்துடன் துவங்கியது. அதன் பின், காலை, 8:30 மணிலிருந்து, 10:30 மணிக்குள், கைலாசநாதருக் கும், கமலாம்பிக்கைக்கும், திருமண விழா நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர். பகல், 2:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பெரிய நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !