சேத்தூர் மாரியம்மன் கோயில் பூக்குழி
ADDED :2788 days ago
சேத்துார்;சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று இரவு பூக்குழி இறங்கினர்.மாரியம்மன் கோயிலில் பங்குனிவிழா மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வலம் வர, பக்தர்கள் அக்கினி சட்டி வீதி உலா நடைபெற்றது. விழாவின் ஏழாம் நாளில் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பின்னர் ஆயிரம் கண் பானை முளைப்பாரியை பக்தர்கள் எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். இன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியோடு விழா முடிவடைகிறது.