உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்கிர ஹோரையில் சுத்துங்க!

சுக்கிர ஹோரையில் சுத்துங்க!

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. இவை முறையே பொன்னிறம், கருமை, வெண்மை, சாம்பல், சிவப்பு நிறம் கொண்டவை. இவற்றின் சந்ததிகளே பூமியில் பசுக்களாக வாழ்கின்றன. பாற்கடலில் பிறந்ததால் புனிதம் மிக்கதாக கருதப்படுகின்றன.அதிகாலையில் பசுவை  கண்டால் லட்சுமியின்அருள் கிடைக்கும். வெள்ளியன்று காலை 6:00–7:00 மணிக்குள் சுக்ர ஹோரையில் பசுவை சுற்றி வர திருமணத்தடை நீங்கும். அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். பசுவை வழிபடுவோர் பூவுலக வாழ்வுக்கு பின் பசுக்களின் உலகமான ‘கோலோகத்தில்’  கிருஷ்ணருடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !