பாட்டுக்கு வழிவிட்ட நதி
ADDED :2788 days ago
பிருந்தாவனத்தில் ஜீவசமாதி அடைய தயாரானார் குரு ராகவேந்திரர். அப்போது அவரது சீடர் அப்பண்ணாச்சாரியார், குருவின் கட்டளையை ஏற்று ‘பிஞ்சலா’ என்னும் இடத்திற்குச் சென்றிருந்தார். சமாதியில் குருநாதர் அமரவிருக்கும் செய்தியை கேள்விப் பட்டு பதற்றமுடன் வந்தார். வழியில் துங்கபத்திரா ஆற்றில் வெள்ளம் குறுக்கிட்டது. கரையில் நின்றபடி, ‘ஸ்ரீ பூர்ணபோத குருதீர்த்த...” என்னும் பாடலை பாடி குருநாதரை வழிபட்டார். இவரது பக்திக்கு கட்டுப்பட்ட நதி, இரண்டாக பிரிந்து நடுவில் பாதை காட்டியது. பிருந்தாவனத்தை அப்பண்ணாச்சாரியார் நெருங்கிய போது, சமாதியின் மேற்பரப்பை கற்பலகையால் மூடி கொண்டிருந்தனர் பக்தர்கள். அப்போதும் மீண்டும் ஒருமுறை பாடி குருநாதர் அருள் கிடைக்கப் பெற்றார். தினமும் பகல்நேர பூஜையின் போது பிருந்தாவனத்தில் இப்பாடல் பாடப்படுகிறது.