உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாம்பூலம் தரிக்கும் முறை..

தாம்பூலம் தரிக்கும் முறை..

தாம்பூலம் தரிக்கும்போது, முதலில் வெற்றிலையைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகுதான் பாக்கைப் போட்டுக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பைச் சாப்பிட்டால் பாவம். சுண்ணாம்பு வைத்திருந்த வெற்றிலையைச் சாப்பிட்டால் ஆயுள் குறையும். வெற்றிலையின் காம்பில் கிருமியும், நுனியில் பாவமும், நரம்பில் அறிவைக் குறைக்கும் தன்மையும் உள்ளதால் வெற்றிலையின் நுனி, அடி, நரம்பு ஆகிய பகுதிகளை நீக்கிய பின்னே சாப்பிடலாம். வெற்றிலையின் உட்பகுதியில் சுண்ணாம்பு தடவக்கூடாது, வெற்றிலையை வெளிப்புறமாக மடிக்கக் கூடாது. காலையில் பாக்கையும், மதியும் சுண்ணாம்பையும், இரவில் வெற்றிலையையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !