சீதைக்கு ஒரு கோயில்
ADDED :2794 days ago
நமது நாட்டில் ராமபிரானுக்குப் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. சீதாதேவியை மூலவராகக்கொண்டு கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கøயில் சீதைக்கென்று ஒரு கோயில் உள்ளது. அங்கு நுவரேலியா செல்லும் பாதையில் தரைமட்டத்திற்குக் கீழே, ஒரு பள்ளத்தில் சீதாதேவி கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தை ‘சீதை எலியா’ என்று கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் மூலவராக சீதாதேவி விளங்க ராமர், லட்சுமணன், அனுமன் சிலைகளும் உள்ளன. இந்தக் கோயிலை நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கேரளத்திலிருந்துவந்த ‘சுவாமி சிவமயம்’ என்பவர் நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கை வேந்தன் இராவணன் சீதாதேவியைக் கடத்திச்சென்று அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். தற்போது அந்த இடம் ‘சீதாவாடிகா ’ என்று போற்றப்படுகிறது. இந்த இடம் புண்ணிய திருத்தலமாகவும் சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.