உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப்ரஸ்தானத்ரயம்

ப்ரஸ்தானத்ரயம்

(இந்து மதத்தின் முப்பெரும் ஆதார சாத்திரங்கள்)

சநாதன தர்மத்தின் அறுதி உண்மைகள், வாழ்வியல் நெறிமுறைகள் அனைத்துமே முப்பெரும் ஆதார சாத்திரங்களையே சார்ந்துள்ளன. அவை:

1. உபநிஷதங்கள்: வேதங்களைப் பிறப்பிடமாகக் கொள்வதால் இவை சுருதிப் ப்ரஸ்தானம் என்றும், உபதேசப் ப்ரஸ்தானம் என்றும் அழைக்கப்படும்.

2. பிரம்ம சூத்திரங்கள்: யுக்திகளின் மூலம் விவாதங்களை முன் வைத்து வேதாந்தக் கருத்துக்களைத் தெளிவாக்கி உணர்த்துவதால் இவை யுக்திப் ப்ரஸ்தானம் எனப்பட்டது.

3. பகவத் கீதை: ஒரு மனிதனின் கடமை மற்றும் ஆன்மிக வழிகளை விரிவாக விளக்குவதால் இது சாதனா ப்ரஸ்தானம் என்றும், மகாபாரதத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்ததால் ஸ்மிருதிப் ப்ரஸ்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !