உபநிஷதங்கள்
ADDED :2793 days ago
வேதங்களின் அறுதிப் பகுதியே உபநிஷதங்கள். ஆகவே இவை வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றன. வேதாந்தம், ஆத்ம ஞானத்தைப் புகட்டி அடையப்பட வேண்டிய பரமபதமாகிய பிரம்மத்தை எடுத்துக் கூறுகிறது. ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்ட உபநிஷதங்கள் இருந்தாலும் 108 உபநிஷதங்கள் பிரபலமானவை. இவற்றுள் 10 உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்க உரை எழுதியுள்ளார்.