உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம சூத்திரம் (யுக்திப் பிரஸ்தானம்)

பிரம்ம சூத்திரம் (யுக்திப் பிரஸ்தானம்)

உபநிஷதக் கருத்துக்கள் ஒருங்கமைக்கப்பட்ட பகுதியே பிரம்ம சூத்திரம். மாமுனியாகிய பாதராயணர் எனப்படும் வியாசர் தொகுத்த இந்த நூல் எல்லாவித வேதாந்தத் தத்துவங்களுக்கும் ஆதார நூலாகும். இது வேதங்களின் லட்சியம் என்றே வர்ணிக்கப்படுகிறது. 555 சுலோகங்கள் கொண்ட இந்நூல் 4 அத்தியாயங்களாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது.

ஜீவ பிரம்ம ஐக்கியத்தையும், அதன் அனுபூதிக்கான வழிகளையும், தியானங்களையும், ஆன்மிகச் சாதனைகளையும் அவற்றின் நிறைவையும் விரிவாகச் சொல்கிறது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்ற வேதாந்த தத்துவப் பிரிவுகள் பிரபலமாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !