உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளைமாடுகளுடன் பழநி வந்த பக்தர்கள் : பலநூறாண்டு பாரம்பரியம்

காளைமாடுகளுடன் பழநி வந்த பக்தர்கள் : பலநூறாண்டு பாரம்பரியம்

பழநி: பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் காளைமாடுகளை அலங்கரித்து பாதயாத்திரையாக வந்து சுவாமிதரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்அருகே சங்காரண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் காளைமாடுகளுக்கு அலங்காரம் செய்து, பாத யாத்திரையாக கொடுமுடியில் தீர்த்தம் எடுத்து நேற்று பழநி மலைக்கோயில் காளை மாடுகளுடன் கிரிவீதி வலம்வந்து தரிசனம் செய்தனர். இதுகுறித்து பட்டக்காரர் பாலசுப்ரமண்யன் கூறியதாவது: பலநுாறு ஆண்டுகளாக, எங்கள் சமுதாய மக்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோயில் காளைகளுடன், பழநிக்கு ஏழு நாட்கள் பாதயாத்திரையாக வருகிறோம். காவல் தெய்வம் காளை மாடுகளை வணங்கி, கொடுமுடியில் தீர்த்தம் எடுத்து, பழநியாண்டவருக்கு அபிேஷகம் செய்து வழிபட்டோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !