உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா

கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா

 மானாமதுரை, மானாமதுரை கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாகடந்த 21 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் மாலை 5:00மணிக்கு எழுந்தருளினார்.பக்தர்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !