மகா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :3050 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை விட்டுகட்டி மகா கணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., விட்டுகட்டியில், மகா கணபதி விநாயகர் கோவில் உள்ளது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று விநாயகருக்கு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, விட்டுகட்டி பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.