தாயமங்கலத்தில் நாளை பொங்கல்
ADDED :2787 days ago
சிவகங்கை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நாளை பொங்கல் வைபவம் நடக்கிறது. இன்று (ஏப்., 4) இரவு பூத வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய விழாவான பொங்கல் வைபவம் நாளை (ஏப்., 5) நடக்கிறது. ஏப்., 6 ல் இரவு மின்னொளி தேரோட்டம், ஏப்., 7 ல் பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு, கரும்புதொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கின்றன. அன்று மாலை அம்மன் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 8 ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.