தாயமங்கலம் கோயில் திசையில் பொங்கல் வைத்த பெண்கள்
ADDED :2801 days ago
மானாமதுரை: மானாமதுரையில் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தாயமங்கலத்திற்கு அருகே உள்ள மானாமதுரையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று தாயமங்கலம் ரோட்டில் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.